ஆத்தி.., ஆர் ஜே பாலாஜியா இது? 20 வருசத்துக்கு முன்னாடி இப்படி இருக்காரு.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
ஆத்தி.., ஆர் ஜே பாலாஜியா இது? 20 வருசத்துக்கு முன்னாடி இப்படி இருக்காரு.., அவரே வெளியிட்ட பதிவு!!
ஆத்தி.., ஆர் ஜே பாலாஜியா இது? 20 வருசத்துக்கு முன்னாடி இப்படி இருக்காரு.., அவரே வெளியிட்ட பதிவு!!

ஆர் ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவரின் மனைவியை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆர் ஜே பாலாஜி:

தமிழ் சினிமாவில் ஆர்ஜே, நடிகர், இயக்குனர் என பன்முக திறன்களை கொண்டு விளங்குபவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவர் நடிப்பில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அது போக இப்படத்தில் சத்யராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது ஆர் ஜே பாலாஜி கல்லூரியில் படிக்கும் பொழுது தன்னுடன் சேர்ந்து படித்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றாலும், நாளைடைவில் சேர்த்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 குழந்தை இருக்கிறது.

அடக்கடவுளே.., ரோபோ ஷங்கரின் இந்த நிலைமைக்கு இதான் காரணமா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி தனது மனைவியின் பிறந்த நாளான இன்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 20 ஆண்டுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 2003-2023 கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்து வந்துவிட்டோம். ஆனால் தற்போது வரை அந்த காதல் குறையவே இல்லை. எனக்கு அன்பான மனைவி, எனது குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருப்பதற்கு நன்றி. இனிய பிறந்த நாள் ஆச்சு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது நம்ம ஆர்ஜே பாலாஜியா என்று வாயை பிளந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here