அடக்கடவுளே.., ரோபோ ஷங்கரின் இந்த நிலைமைக்கு இதான் காரணமா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

0
அடக்கடவுளே.., ரோபோ ஷங்கரின் இந்த நிலைமைக்கு இதான் காரணமா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!
அடக்கடவுளே.., ரோபோ ஷங்கரின் இந்த நிலைமைக்கு இதான் காரணமா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

நடிகர் ரோபோ சங்கர் மிகவும் உடல் எடை குறைந்ததன் காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரோபோ சங்கர்:

சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். இப்படி பிஸியாக இருந்து வரும் இவர் சமீப காலமாக மிகவும் மெலிந்த நிலையில் காட்சி அளித்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவருக்கு என்ன ஆனது ஏதானது பதறி போய் ஷங்கர் குடும்பத்தினரிடம் கேட்க தொடங்கினர். இந்நிலையில் அவரின் உடல் எடை குறைந்ததன் காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசியதாவது, ரோபோ ஷங்கர் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் உடல் பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

அஜித்தின் விடாமுயற்சி.., படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

ஆனால் அவர் ரீச்சான பிறகு தேவையில்லாத நபர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இரவு சரக்கு பாட்டிலில் கையை வைக்க வில்லை என்றால் தூக்கம் வராது என்ற நிலைக்கு ஆளானார். இதனால் தான் அவருக்கு உடல் எடை குறைந்து நிற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறினார். பயில்வான் இதற்கு முன்னர் மனோ பாலாவையும் இப்படி தான் குடிக்கு அடிமையாகி இறந்தார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here