தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்., இதுல தான் விண்ணப்பிக்கணும்??

0
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்., இதுல தான் விண்ணப்பிக்கணும்??
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்., இதுல தான் விண்ணப்பிக்கணும்??

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 8.17 லட்ச மாணவ மாணவியர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்று முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் உள்ள மையங்களில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒரே நேரத்தில் ஐந்து கல்லூரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

+2 பொதுத்தேர்வு முடிவால் விபரீதம்.., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்.., திருவண்ணாமலையில் நடந்த துயர சம்பவம்!!!!

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 ம், பதிவு கட்டணமாக ரூ.2ம் சேர்த்து ரூ.50 செலுத்த வேண்டும். SC / ST பிரிவினருக்கு பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 வசூல் செய்யப்படும். கூடுதல் விபரங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here