தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு – டிஎன்பிஎஸ்சி

0
TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆனது போட்டித்தேர்வுகள் மூலம் தமிழகத்தின் பல துறைகளுக்கான பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் வகையில் விதிமுறைகளை அமைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

‘பிஎஸ்டிஎம்’ சான்றிதழ்

கிராமப்புற மாணவர்கள் தான் தமிழகத்தில் அதிகளவில் தமிழ் வழியில் படிக்கின்றனர். எனவே அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் வழியில் படித்தவர்கள் ‘பிஎஸ்டிஎம்’ சான்றிதழினை சமர்ப்பிக்க வேண்டும். இதன் படி பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் இது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

தவறாகப் பயன்படுத்துகின்றனர்

இந்த இட ஒதுக்கீடானது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை தமிழ்வழியில் முடித்தவர்களும் இடஒதுக்கீட்டில் வேலை பெறக்கூடிய நிலை உள்ளது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் தேர்வாகும் 60 சதவீதம் பேர் பள்ளியில் மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சி முறையிலும் அல்லது இன்ஜினியரிங் படித்தவர்களாகவே உள்ளனர். இதனால் தமிழ் வழியில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் வேலை கிடைப்பதில்லை.

இதனை சரிசெய்யும் விதமாக தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி ‘பிஎஸ்டிஎம்’ சான்றிதழை சமர்பிப்பவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் தேர்வாகும் வகையில் வழிவகை செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here