டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!

0

தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் முக்கிய புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து உள்ளன. மேலும் இந்த முறைகேடு விசாரணையில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

கணினி மையம் டூ கோடீஸ்வரர்..!

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாத ஜெயக்குமார் இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவர் 2013ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவடியில் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு நகல் எடுக்க வந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் 2016ம் ஆண்டு தொடங்கி ஓம்காந்தனுடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி அலுவலக கோப்புகளை கையாளும் அறையின் சாவி முதல், அதன் ரகசியங்களை கற்றுக் கொண்டு இந்த முறைகேட்டில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர்.

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

ரூ. 6 கோடி வரை..!

தேர்வு முறைகேட்டை முழுநேர தொழிலாக ஜெயக்குமார் நடத்தி வந்து உள்ளார். இதில் முகவர்கள், சொந்தக்காரர்கள் மூலம் நாளுக்கு நாள் ஆட்களை சேர்த்து லட்ச லட்சமாக பணம் பெற்று அவர்களுக்கு வேலை பெற்று கொடுத்துள்ளார். கிடைத்த பணத்தில் வீடு, கார், நகை மற்றும் நிலம் என சமூகத்தில் தனது அந்தஸ்தை உயர்த்தி உள்ளார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து போலீசார் 12 லட்ச ரூபாய் பணம் மற்றும் 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் இதுவரை ரூ. 6 கோடி வரை தேர்வு முறைகேட்டிற்கு பணம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் வாங்கி குவித்த சொத்துக்களை முடக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here