விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி நடத்தி வரும் இந்த விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேர்வில் மேலும் குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பல புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – காவலரே டிஜிபி இடம் புகார் அளித்ததால் புது சர்ச்சை..!

இருநிலைகளாக தேர்வு..!

இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வுகள் இருநிலைகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதனிலை மற்றும் முதன்மை என இரு நிலைகளாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனால் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

  • விடைத்தாளில் கையொப்பத்துக்கு பதில் இடது பெருவிரல் கைரேகை பதிவு அறிமுகம்.
  • விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜி.பி.எஸ் முறையில் கண்காணிக்கப்படும்.
  • குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
  • விடை தெரியவில்லை எனில் வட்டத்தை கருமையாக்க வேண்டும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

போன்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதையெல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க..! டி.ஆர்.பி தேர்வுக்கு 24 புதிய கட்டுப்பாடுகள் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு அரசுத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசின் மீது தேர்வர்கள் நம்பிக்கை இழந்த்திருந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here