
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு நிகழ போகும் வானிலையில் மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 14 (இன்று) முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படுமே தவிர, நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் அதிகப் பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்ஸாக தான் இருக்கும். இத்தகைய வானிலை மாற்றத்தால் வங்ககடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீதான பாலியல் விவகாரம் – நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!