தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போதைக்கு திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால், மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இருப்பினும் தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு உறுதியான முடிவெடுக்கவில்லை. இதற்கிடையில் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி இல்லை’ அறிவிப்பு – உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

இந்நிலையில் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here