தமிழக பள்ளி மாணவர்களுக்கான “இலவச மடிக்கணினி திட்டம்”., நிதியமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.20) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதால், நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தாலிக்கு தங்கம், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிறுத்தப்பட்டதாக கூறப்படும் மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டமிடப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC யின் குரூப் 1 தேர்வில் பணியிடங்கள் இவளோ தான்? அப்போ கண்டிப்பா இது தேவை? மாஸ் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here