தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் – உறுதி மொழியுடன் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!!

0

தமிழக பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புதிய திட்டம் ஒன்றை, உறுதிமொழியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிரடியாக துவக்கி வைத்தார்.

ஸ்டாலின் தொடக்கம்:

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள், கடந்த திங்கட்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் “குட்டிக் காவலர் ” என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் என்று துவக்கி வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு கையேடுகளை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள் தான் தங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். குட்டி காவலராக பொறுப்பேற்கும் நான், என்ற உறுதி மொழியை ஸ்டாலின் காணொளி வாயிலாக வாசிக்க, அதை விழாவில் பங்கேற்ற மாணவர்கள் திரும்பச் சொல்லி உறுதி எடுத்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆப்களுக்கு தடை? தீவிரவாத பட்டியலில் சேர்த்து அதிரடி உத்தரவு!!

கோவையில் 4.50 லட்சம் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் மற்றும் முதல்வர் பங்கேற்ற இந்த, நிகழ்வு தேசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்று அதற்கான சாதனை சான்றிதழ், முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த குட்டி காவலர் திட்டத்திற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here