தமிழக பள்ளி மாணவிகளுக்கு புற்று நோய்க்கான தடுப்பூசி…, சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மாணவிகளுக்கு புற்று நோய்க்கான தடுப்பூசி..., சுகாதாரத்துறை அறிவிப்பு!!!
தமிழக பள்ளி மாணவிகளுக்கு புற்று நோய்க்கான தடுப்பூசி..., சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் முக்கியமாக 40 வயதைக் கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என தகவல் தெரிவிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ச்சியான பாலியல் செயல்பாட்டால் ஏற்படும் இந்த தொற்று 10 முதல் 15 ஆண்டுகளில் புற்று நோயாக உருவெடுக்கிறது. இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியாவிட்டாலும் “வருமுன் காப்பதே” நன்று என்பது போல் இதற்கான தடுப்பூசியை பள்ளி மாணவிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை முதற்கட்டமாக ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில பள்ளி மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2023 : விவசாயிகளிடம் கருத்து கேட்பு பணிகள் தீவிரம்! அமைச்சர் அறிவிப்பு!!

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 முதல் 14 வயது மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான முக்கிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே, அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் இத்திட்டத்தை தொடங்க உள்ளோம்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here