தமிழக வேளாண் பட்ஜெட் 2023 : விவசாயிகளிடம் கருத்து கேட்பு பணிகள் தீவிரம்! அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக வேளாண் பட்ஜெட் 2023 : விவசாயிகளிடம் கருத்து கேட்பு பணிகள் தீவிரம்! அமைச்சர் அறிவிப்பு!!
தமிழக வேளாண் பட்ஜெட் 2023 : விவசாயிகளிடம் கருத்து கேட்பு பணிகள் தீவிரம்! அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில், நடப்பு நிதியாண்டுக்கான வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகள் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு வேளாண் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் வேண்டுகோள்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில், 2023-24 ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன், விவசாயிகள் இது சார்ந்த தங்கள் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்குமாறு வேளாண்மை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் முதற்கட்டமாக கடந்த ஜனவரி 22 ஆம் தேதி, தென் மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். இதுபோக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த கூட்டம் நடத்தப்படும் என்றும், இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேளாண்மை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இனி போட்டோவை original quality யில் அனுப்பலாம்!

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது 93 63 440360 என்ற whatsapp எண் வாயிலாகவோ தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கருத்து கேட்டு நடத்தப்பட்ட பின்பே வேளாண் நிதி நிலை அறிக்கை தயார் செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here