குடும்ப தலைவிகளுக்கான 1000 ஊக்கத்தொகை இல்லை?? அமைச்சர் துரைமுருகன் புதிய விளக்கம்!!

0
போடு.. செம.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போடு.. செம.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை, இப்போதைக்கு இல்லை என்றும், அதனை அடுத்த 6 மாத காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

திமுக அரசு அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை என்ற தேர்தல் வாக்குறுதி கடந்த ஓராண்டாக இன்னும் கிடப்பில் போடபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. விரைவில் இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் சட்டசபையில் உறுதியளித்தார். இந்த நிலையில், மகளிருக்கான ஊக்கத்தொகை குறித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க இன்னும் 6 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முழுமூச்சாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த திட்டம் இன்னும் கிடப்பில் போடப்பட்டு இருப்பது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here