தமிழகத்தில் இனி சொத்து வரி கட்ட புதிய வசதி அறிமுகம்…, வெளியான நியூ அப்டேட்!!

0
தமிழகத்தில் இனி சொத்து வரி கட்ட புதிய வசதி அறிமுகம்..., வெளியான நியூ அப்டேட்!!
தமிழகத்தில் இனி சொத்து வரி கட்ட புதிய வசதி அறிமுகம்..., வெளியான நியூ அப்டேட்!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் நேரத்தை மிகவும் குறைக்க கூடிய ஒன்றாக நெட் பேங்கிங் மாறி விட்டது. அதாவது, பெரிய மால்கள் முதல் சின்னச்சிறு பொட்டி கடைகள் வரை மொபைல் ஆப் மற்றும் QR கோட் வழியாக UPI எனப்படும் பணப்பரிவர்த்தனை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்து, வங்கி டு வங்கிக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் வீட்டில் இருந்து வரி செலுத்தும் வகையில் மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குள் வசிக்கும் நபர்கள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணையதளத்தில் வரும் ‘க்யூ ஆர் கோட்’ மூலம் சொத்து வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை நேரடியாக கட்டலாம். மேலும், பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேட் லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். இத்துடன், பொதுமக்கள் தங்கள் குறைகள், மற்றும் கோரிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று நகராட்சி தலைவர் பரிதா நவாப் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்., கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here