தமிழகத்தில் இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை.,, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை!!

0
தமிழகத்தில் இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை.,, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை!!
தமிழகத்தில் இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை.,, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை:

வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் நடப்பு வருடமும் வடகிழக்கு பருவமழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 1 வாரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் விடாமல் மழை பெய்தது. இதையடுத்து கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மரங்கள் கீழே விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான இயந்திரங்களைதயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என நகர அதிகாரிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் பருவமழையால் தமிழகத்தில் தற்போது வரை, 35 பேர் பலி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருக்கு.., வாரிசு படத்துல ஒரு சம்பவம் இருக்கு.., லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்..,வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்!!

இதையடுத்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரு.4,800 நிவாரணம் வழங்கப்படும் என்றும், மழையால் குடிசை முழுவதும் இழந்திருந்தால் ரு. 5,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here