“தளபதி 67″ல் நைசாக ஜகா வாங்கிய பிரபல இயக்குனர்..,  சோகத்தில்  மூழ்கிய ரசிகர்கள்!!

0
"தளபதி 67"ல் நைசாக ஜகா வாங்கிய பிரபல இயக்குனர்..,  சோகத்தில்  மூழ்கிய ரசிகர்கள்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த இயக்க இருக்கும் தளபதி 67 படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

தளபதி 67:

தென்னிந்திய சினிமாவில் தலை சிறந்த நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது  வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விருந்தாக இருக்கிறது. இதை தொடர்ந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்க இருக்கிறார்.  இப்படத்தில் நடிகர் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். மேலும் அவருக்கு வில்லனாக 5 பேர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் இதுவரை கேஜிஎப் பட வில்லன் சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன் , பிரித்விராஜ், நிவின் பாலி மற்றும் விஷால் ஆகியோர் கமிட்டாகி இருந்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் அதிக படங்களில் நடித்து வருவதால், தளபதி 67 படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாததால் விலகினார்  என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்னொரு பிரபலமும் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதாவது இயக்குனர் மிஷ்கின் தளபதி 67 ல் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது மாதிரியான ஒரு விஷயம் நடக்கும் என்று முன்பே தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் இப்படத்தில் நடிகர் விஷால் கமிட்டாகியுள்ளார் என்று  தகவல் வெளியான அன்றே மிஷ்கின் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அனைத்து விஜய் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here