ஆதியை வெறுக்கும் ஜெசி.., அண்ணன், தம்பிகளுக்குள் முட்டும் சண்டை.., பல ட்விஸ்டுகளுடன் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

0
ஆதியை வெறுக்கும் ஜெசி.., அண்ணன், தம்பிகளுக்குள் முட்டும் சண்டை.., பல ட்விஸ்டுகளுடன் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!
ஆதியை வெறுக்கும் ஜெசி.., அண்ணன், தம்பிகளுக்குள் முட்டும் சண்டை.., பல ட்விஸ்டுகளுடன் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் செந்தில், ஆதி நடுரோட்டில் சண்டை போட்ட விஷயத்தை அறிந்த சரவணன் வீட்டிற்கு வந்து உங்களுக்கு அறிவே இல்லையா என திட்டுகிறார். இதற்கு இருவரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். பிறகு இருவரையும் சிவகாமியிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சரவணன் கூறுகிறார். முதலில் அர்ச்சனா மன்னிப்பு கேட்டால் கடையை நம்ம எடுத்துக் கொள்ளலாம் என மனதுக்குள் நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்க பிறகு செந்திலும் மன்னிப்பு கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களை தொடர்ந்து ஜெஸியும் மன்னிப்பு கேட்க, ஆதி பார்மாலிட்டிக்கு மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் அர்ச்சனா இந்த கடை யாருக்குனு சொல்லுங்க என சிவகாமியிடம் கேட்கிறார். அதற்கு ஜெசி கடை எங்களுக்கு தான் என்று சொல்லுகிறார். இறுதியில் சிவகாமி கடை ஜெசிக்கு தான் என பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். இதனால் ஆத்திரமடையும் அர்ச்சனா ஒரு திருடன் கிட்டையா கடைய கொடுப்பீங்க என விவாதம் செய்கிறார்.

இதுக்கு ஜெசி வார்த்தையை அளந்து பேசுங்க, எதுக்கு ஏன் புருஷன திருடனு சொல்றீங்கன்னு சண்டை போடுகிறார். இறுதியில் அர்ச்சனா ஆதி 5 லட்சம் பணம் திருடிய விஷயத்தை போட்டு உடைக்கிறார். இதை கேட்ட ஜெசி அதிர்ச்சி அடைகிறார். ஆதியிடம் நீ பணத்தை எடுத்தியா என கேட்க அதற்கு எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர். பிறகு ஆதி, ஜெசி இருவருக்கும் இடையில் பூகம்பம் வெடிக்கிறது. அப்போது ஆதியிடம், ஜெசி எனக்கு நெக்லஸ் அந்த பணத்தில் தான் வாங்கி கொடுத்தியா என கேட்கிறார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் இனி இவர்கள் தான்?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி மாற்றங்கள்!!

அதற்கு ஆதி ஆமாம் என்று சொல்ல, ஜெசி கோவப்பட்டு சென்று விடுகிறார். மறுபுறம் சந்தியாவுக்கு சரவணன் கால் செய்ய அதை சந்தியா எடுக்காமல் தூங்குகிறார். பிறகு சேட்டா மற்றும் ஜோதி கதவை தட்ட சந்தியா கதவை திறக்காமல் இருக்கிறார். இதனால் இருவரும் பதற்றம் அடைகின்றனர். இப்படி இருக்கையில் அடுத்தடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here