தமிழக வாக்காளர்களே., ஓட்டு போடுவதற்கு பூத் சிலிப் மட்டும் போதாது? இந்த ஆவணமும் வேணும்?

0
தமிழக வாக்காளர்களே., ஓட்டு போடுவதற்கு பூத் சிலிப் மட்டும் போதாது? இந்த ஆவணமும் வேணும்?

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பூத் சிலிப் வழிகாட்டுதலுக்கு மட்டுமே பயன்படும். வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கு கீழ்க்காணும் 13 ஆவணங்களில், ஏதேனும் ஒன்று கட்டாயம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூத்த குடிமக்களுக்கான FD முதலீடு திட்டம்., இந்த வங்கியில் இவ்ளோ வட்டியா? முழு விவரம் உள்ளே…

அதன்படி அடையாள ஆவணமாக,

 • ஆதார் அட்டை,
 • வாக்காளர் அட்டை,
 • ஓட்டுநர் உரிமம்,
 • பான் கார்டு,
 • இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
 • புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக்,
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை,
 • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
 • இயலாமைக்கான தனித்துவமான அட்டை,
 • மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் அடையாள அட்டை,
 • மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,
 • நாடாளுமன்ற, சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வாக்களிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here