தமிழகத்தில் 303 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற 303 மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க விரும்பும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

மருத்துவ சீட்:

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தினர். இவர்கள் எவ்வித தனியார் மையங்களிலும் பயிலாமல், அரசு நடத்திய இலவச பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க கட் ஆப் மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் சிக்கல் நிலவுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இம்முறை தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். மேலும் அரசுப்பள்ளி மாணவகர்ளுக்கு உள் இடஒதுக்கீட்டில் 7.5% வழங்குவது தொடர்பான மசோதாவிற்கும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு இம்முறை மருத்துவ படிப்புகளில் விரைவில் இடம் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் தனியார் அமைப்புகள் இலவச நீட் பயிற்சிகள் வழங்கினால் அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here