ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் – அமைச்சரவை ஒப்புதல்!!

0

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான சம்பளம் போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை அறிவித்து உள்ளது. இதற்காக ரூ.2081.68 கோடி செலவிட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

போனஸ் வழங்கல்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு பாதிப்படைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவு சரிந்ததால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் நிதித்துறை ஈடுபட்டு உள்ளது. ஊரடங்கில் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக பலரும் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டனர். நாட்டில் பணப்புழக்கமும் குறைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே செலவினங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா முன்பணம், தீபாவளி போனஸ் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க 3,737 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 303 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

railway
railway

தற்போது ரயில்வே துறை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க கூட்டத்தில் திட்டமிடப்பட்டு ரூ.2081.68 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரயில்வே துறையில் பணியாற்றும் 11.58 லட்சம் ஊழியர்கள் பயனடைவர். மேலும் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்து, செலவினங்களும் உயரும் என்பதால் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here