தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் அறிவிப்பு!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழக மக்கள் அனைவருக்கும் அரசு செலவில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் அவர்கள் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலவச கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதற்கு அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளே முக்கிய காரணம் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் பணிகளில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகளையும் முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இடையில் முதல்வர் அவர்களின் தாயார் காலமானதால் அவரது பயணத் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அனைத்து சடங்குகளும் நிறைவடைந்த நிலையில் இன்று புதுக்கோட்டைக்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின்னர் உரையாற்றிய முதல்வர், கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது தமிழக மக்கள் அனைவர்க்கும் அரசு செலவில் இலவசமாக போடப்படும் என உறுதி அளித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. அதற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் எனவும் முதல்வர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here