தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – வெளியூர் வாசிகள் ஏப்ரல் 4ஆம் தேதியில் சொந்த ஊர் திரும்ப உத்தரவு!!

0

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெளியூர்வாசிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பணிகளில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்து விட வேண்டும் என்று கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை மையம் தகவல்!!

அதே போல் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு வசதியாக தமிழக அரசு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் பேருந்துகளில் செல்லும் போது முகக்கவசத்தினை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் உடல் வெப்பநிலையினையும் சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here