ஸ்டாலினை தேர்தலுக்கு பின்னாடி பார்க்கவே முடியாது, ஆனா உங்களை எப்படி?? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினை பற்றி விமர்சித்து பேசியுள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி

தற்போது தமிழக்த்தில் தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடந்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரையை தொடங்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் குறை கூறி தங்களது வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை செய்யாத காரியங்களை எல்லாம் செய்து வருகின்றனர். மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பது, துணி துவைப்பது, உங்களில் நான் ஒருவன் என்று சொல்வது என ஒரு கூட்டமே அலைந்து கொண்டுள்ளது.

இந்த பக்கம் என்ன என்று பார்த்தால் குஷ்பூ தோசை சுட்டு வாக்கு சேகரிக்கிறார். கொரோனா சமயத்தில் வெளியே கூட வராமல் இருந்த கமல் மக்கள் மத்தியில் அமர்ந்து டீ குடிக்கிறார். இதனை எல்லாம் அனைவரும் கவனித்துக்கொண்டு தான் உள்ளனர். மேலும் பொள்ளாச்சி பிரச்சனையை இப்பொழுது இழுக்கின்றனர். அவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?? என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அப்படி இருக்க இந்த கேள்வியை கேட்டவர்கள் இத்தனை நாட்கள் இங்கே தானே இருந்தார்கள்.

அதெப்படி எலெக்சன் நேரத்தில் மட்டும் இவர்களுக்கு இதெல்லாம் முன்னாடி வந்துள்ளது. தற்போது எடப்பாடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரை தேர்தலுக்குப் பிறகு உங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. நான் உங்களில் ஒருவன். என்னை எப்பொழுதும் சந்தித்து உங்களது குறைகளை கூற முடியும். வரும் ஆண்டுகளிலும் மக்களில் ஒருவனாக தமிழ் நாட்டை முன்னெடுத்து செல்வேன்’ என்று கூறியுள்ளார் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஒருவர் விவசாயிகள் பிரச்சனைக்காக உங்களை சந்திக்க மனு அனுப்பி இருந்தேன் இதுவரையிலும் அதற்கு பதில் எதுவும் வரவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பொள்ளாச்சி விஷயத்தை எல்லாம் நீங்க இப்படி நேரம் ஒதுக்கி பேசுன மாதிரி தெரியவில்லையே என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here