
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பண்டிகை தினங்களை முன்னிட்டு பெரும்பாலானோர் பேருந்து பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் வருகிற நவ.12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகள் பலவும் சாதாரண கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த புகாரை பரிசீலித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் 39 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
47 கோடி பணம் மோசடி., தலைமறைவான பிரணவ் நகை கடை உரிமையாளருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!!