உலக கோப்பையில் ஆட்டாமல் அவுட்டான முன்னணி வீரர்…, கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
உலக கோப்பையில் ஆட்டாமல் அவுட்டான முன்னணி வீரர்..., கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
உலக கோப்பையில் ஆட்டாமல் அவுட்டான முன்னணி வீரர்..., கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இன்று (நவம்பர் 6) பங்களாதேஷ் அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா 4, குசல் மெண்டிஸ் 19, பாத்தும் நிஸ்ஸங்க 41, சதீர சமரவிக்ரம 41 ரன்களில் பெவிலியன் திரும்பி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து, ஏஞ்சலோ மேத்யூஸ் அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்த்த நிலையில், ஹெல்மெட்டை தவறாக அணிந்து வந்துள்ளார். இதனால், மாற்று ஹெல்மெட்டை அணிந்து வருவதற்குள் ‘டைம் அவுட்’ ஆனதால், வெளியேற்றப்பட்டார். இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட்டில் வெளியேறிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெயரை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கை அணியானது 24 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here