Saturday, May 18, 2024

கொரோனா தடுப்பு திட்டங்கள் – தலைமை செயலர் ஆட்சியாளர்களுடன் ஆலோசனை!!

Must Read

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலளரான சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம்  கொரோனா தடுப்பு மற்றும் ஆன்லைன் ,மூலமாக பட்டா வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் என பல திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கொரோனா பொது முடக்கம்:

கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் தொடங்கி  இன்று வரை அமலில் இருந்து வரும் நிலையில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 28 ஆம் தேதி 9 ஆம் கட்ட பொது முடக்கத்தை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலபடுத்தப்பட்டது. அவைகளான பூங்காக்கள், சரணாலயங்கள் ,கல்வி நிறுவனங்கள் மற்றும்  திரையரங்கள் 50% இருக்கைகளுடன் திறக்கலாம் என்று அறிவித்து உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினரிடம் பள்ளி திறப்பை குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ,கொரோனா தடுப்பு, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் காப்பீடு திட்டம், கிராமம் மற்றும் பழங்குடியினருக்கு வீடு கட்டும் திட்டம், ஆன்லைன்  பட்டா திட்டம் என பல திட்டங்களை பற்றியும்  விவாதித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -