அரசு பேருந்துகளில் 25 சதவீத கட்டண சலுகை – கேரளா அரசு அறிவிப்பு!!

0

கொரோனா தொற்று காரணமாக, அரசு பேருந்தில் மக்கள் ஏற தயக்கம் காட்டுகின்றனர். இதை மாற்ற கேரள அரசு அதிவேக பேருந்துகளில் பயணம் செல்ல 25 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.

மூன்று நாட்கள் சலுகை 

நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுடன் கடைபிடிக்கப்படுகிறது. மாநில அரசால் இயக்கப்படும் பேருந்துகளில், மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. இதனால், மாநில போக்குவரத்தின் வருமானம் குறைந்துவிட்டது. மக்களை மீண்டும் அரசு பேருந்தில் பயணிக்க வைக்க, கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அதிவேக (‘சூப்பர் பாஸ்ட்’ ) பேருந்துகளுக்கான கட்டணத்தில் 25 சதவீதம் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை, வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் மட்டுமே தரப்படும். இந்த நாட்கள் பொது விடுமுறையாக இருந்தால் சலுகை கிடையாது. இது சோதனை முயற்சியாக கேரள அரசு போக்குவரத்து கழகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here