டைட்டில் வின்னரை தட்டிக்கழித்த விஜய் டிவி – பிரமாண்ட வாய்ப்பை கொடுத்து தூக்கிவிட்ட சன் டிவி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 வின் டைட்டில் வின்னரான கனி தற்போது, சன் டிவியில் ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் கனி:

விஜய் டிவி ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3 சீசன், தற்போது வரை முடிவடைந்துள்ளது. இதன் 2வது சீசன், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், தர்ஷா, பவித்ரா, மதுரை முத்து, தீபா, ஷகிலா உள்ளிட்ட பலரும் பெரிய அளவில் பேசப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக கனி அறிவிக்கப்பட்டார். காரக்குழம்பு கனி என்று, அன்புடன் அழைக்கப்பட்ட இவர் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இதனால், இவரது திறமைகளை விஜய் டிவி சரியாக பயன்படுத்தவில்லை என  பலரும் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில் இவர், சன் டிவியில் விரைவில் துவங்க உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யூடியூப் சேனல் நடத்தி வரும் கனி, சன் டிவியில் தனக்கு கிடைத்த இந்த மிகப்பெரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here