ஆண்களே தாடி வளரல, அடர்த்தியா இல்லேனு கவலையா இருக்கா – அப்போ இதை செய்யுங்க..!

0

ஆண்களுக்கு இந்த காலத்தில் தாடி வளர்ப்பதில் மிக ஆர்வமாக உள்ளனர். சிலருக்கு அடர்த்தியாக தாடி வளருவதில்லை. அதற்கு தேவையான சில இயற்கையான வழிமுறைகளை பார்ப்போம்.

சருமத்தின் ஆரோக்கியம் முக்கியம்..!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதன் மூலம் சருமத்துவாரங்கள் சுத்தம் அடைந்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு தாடி வளர்ச்சியும் ஊக்குவிக்க முடியும்.

மன அழுத்தம்..!

மன அழுத்தம் உங்கள் மனதை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் சீர்குலைக்க செய்யும். மன அழுத்தம் இருக்கும் போது உடலில் கார்டிசோல் அதிகரிக்கிறது. இது உங்கள் டெஸ்ட்டோஸ்ட்ரான் ஹார்மோன் வளர்ச்சியில் குறைபாடை உண்டாக்குகிறது. மன அழுத்தத்தால் இரத்த நாளங்கள் குறைபாடு நேரும் போது முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்தை பெறுவதும் சிரமமமாக இருக்கிறது.

தூக்கம் அவசியம்..!

தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் அவசியம். இவை குறையும் போது ஹார்மோன் உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் குறைகிறது. உடலில் டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு தூக்கமும் அவசியம். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த தூக்க நேரத்தை கடைபிடித்தால் தாடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தாடிக்கு மசாஜ் செய்யுங்கள்..!

என்ணெய் பயன்படுத்துவதன் மூலம் தாடிக்கு ஊட்டம் கிடைக்கும்.இயற்கை எண்ணெய் சுத்தமான தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் போன்றவற்றையே பயன்படுத்தலாம். அடர்த்தி அதிகரிக்க ஜோஜோபா ஆயில் பயன்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள்.

உணவில் கவனம் தேவை..!

சத்துகள் நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் தாடியை அழகாய் வடிவமைத்துகொள்ளலாம். சத்துமிகுந்த உணவை எடுத்துகொள்வதை ஆண்கள் தவறிவிடுகிறார்கள். தாமிரம், மெக்னீஷியம். வைட்டமின் பி, டி. இ, பி6, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here