கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் – ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!

0
கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் - ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!
கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் - ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!

திருவள்ளூரில் வெவ்வேறு சமூகத்தை சார்ந்த தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் தனது கணவனை அவரது உறவினர்கள் ஆணவக் கொலை செய்து விட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கணவர் ஆணவக்கொலை :

திருவள்ளூர் மாவட்டம் அய்ய நல்லூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அமுல் என்பவருக்கும், சென்னை ஆரணியை அடுத்த காரணி கிராமத்தைச் கௌதம் என்பவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை கௌதமின் வீட்டார் ஏற்று கொள்ளாத காரணத்தால், இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத் தகுந்தது.

கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் - ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!
கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் – ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கௌதமின் நெருங்கிய உறவினர் இறந்து விட்டார் என அழைப்பு வந்ததால் இவர் தன் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றுள்ளார். இவர் சென்று ஒரு மாதம் ஆகியும் திரும்பி வராததால், சந்தேகமடைந்த மனைவி தனது உறவினர்களுடன் கணவரை தேடி அவருடைய ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தன் கணவரின் புகைப்படம் போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, தனது கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகவும், அதை மறைக்கவே என்னிடம் அவர் இறப்பு பற்றி தெரிவிக்க வில்லை எனவும் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here