கமல் ஹாசனின் விக்ரம் பட சாதனையை முறியடிக்கவுள்ள திருச்சிற்றம்பலம் – தலைசுற்ற வைக்கும் தகவல்!

0
கமல் ஹாசனின் விக்ரம் பட சாதனையை முறியடிக்கவுள்ள திருச்சிற்றம்பலம் - தலைசுற்ற வைக்கும் தகவல்!

அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம்:

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட படங்களே வசூலை பெற்றிருக்கிறது. அந்த வகையில் உலகநாயகன் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அதிக வசூலை அள்ளிய படமாக நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் விளங்குகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியான இத்திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் இப்படத்தின் வசூலை முறியடிக்கும் எண்ணிய நிலையில், கோப்ரா படம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் படம் தொடங்கிய நாள் முதல் இந்நாள் வரை திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூலித்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த அழகும் ஒரே இடத்துல இப்படி நிக்குதே – கண் கொட்டாமல் ரசிக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களால் போற்றப்படுவதற்கான ஒரே காரணம் இந்த கதையின் அம்சம் மட்டுமே. தற்போது வரை திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலக அளவில் 94.25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கமல் ஹாசனின் விக்ரம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்கள் இந்த ஆண்டில் அதிக லாபம் பெட்ரா தமிழ் படங்களாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here