வேற லெவெலில் தெறிக்கவிட்ட தளபதியின் ‘தெறி’ – ஐந்தாண்டுகள் கடந்த சாதனை!!

0

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெறி. இந்த படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இந்த படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தெறி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இது அவரது 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்கு ஏற்பது போல் அனைத்து பாடல்களையும் மிக அருமையாக இசையமைத்திருந்தார். அதேபோல் அனைத்து பாடலும் செம ஹிட் ஆனது. மேலும் இந்த படம் வசூல் வேட்டை நடத்தியதோடு பிளாக் பாஸ்டர் ஹிட்டும் ஆனது. இந்த படம் தான் தனது இரண்டாவது படத்திலேயே அட்லீயை முன்னணி இயக்குனராக அவதாரம் எடுக்க செய்தது. அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உங்க முகம் அழகா, இல்ல அந்த டெட்டி அழகா?? வைரலாகும் குக் வித் கோமாளி பிரபலத்தின் போட்டோஷூட்!!

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற ‘என் ஜீவன்’ என்னும் பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது இதனை தொடர்ந்து ‘ஈனா மீனா டிகா’ என்னும் பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here