இன்ஸ்டாவில் பழகிய கள்ளக்காதலனுடன் அரசுப் பள்ளி ஆசிரியர் ஓட்டம்., திருச்சியில் பரபரப்பு!!!

0

நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் வளர்ச்சியால் பல நல்லவைகள் இருந்தாலும் ஒரு சில தீங்கு செயல்களும் ஈடேறி வருகிறது. அந்த வகையில் திருச்சி கோம்பை புதூரில் சில வருடங்களுக்கு முன் நர்சிங் படித்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காதல் மனைவியான நதியா துறையூர் அருகே அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் மூழ்கியதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நதியா விழுப்புரத்தை சேர்ந்த நவீன் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர்.

காதலை சேர்த்து வைக்கும் லோகேஷ் கனகராஜ்…, லியோ படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற நதியா வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்ட கணவர் ஸ்விட்ச் ஆப் என வந்ததால் அதிர்ந்து போனார். இது தொடர்பாக அவர் துறையூர் காவல்நிலையத்தில் புகார் செய்து விசாரித்ததில் நதியா கள்ளக்காதலன் நவீனுடன் ஒடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here