தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? வெளியான தகவல்!!

0
tn school
34 அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூட உத்தரவு - மாநில கல்வித்துறை திடீர் முடிவு!!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் யாவும் மூடப்பட்ட நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்?? என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிகள் திறப்பு எப்போது??

கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மார்ச் 24 இல் தொடங்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

students
students

தற்போது பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும், அதனை தொடர்ந்து படிப்படியாக மற்ற மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 21 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று தனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்றும் பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு சென்று வரலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here