ஐசிசியின் அடுத்த டெஸ்ட் யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசியின் அடுத்த டெஸ்ட் யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில், தற்போது IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய ஆடவர் அணி T20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளதை நாம் அறிவோம்.இந்த நிலையில் இதற்கு அடுத்த படியாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  இதில் முதலாவதாக இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட்  போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இத்தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடக்க உள்ளது.  இதற்கு முன் இரு அணிகளும் கடந்த ஆண்டு ODI உலக கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடினர். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா T20 அட்டவணை:

  • 1வது டெஸ்ட் போட்டி – நவம்பர் 22 முதல் நவம்பர் 26 வரை
  • 2வது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10 வரை
  • 3வது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை
  • 4வது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை
  • 5வது டெஸ்ட் போட்டி – ஜனவரி 3 முதல் ஜனவரி 7 வரை

Enewz Tamil WhatsApp Channel 

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here