இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. கமலுடன் மோதும் தனுஷ்.. வெளியான முக்கிய தகவல்!!

0
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. கமலுடன் மோதும் தனுஷ்.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். அவர் தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கி, நடித்து வந்தார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது  போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இத்திரைப்படம் மே 10ம் தேதி அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறுபக்கம் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் – 2 திரைப்படமும் அதே நாளில் (மே 16) வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அறிவிப்பால் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடிகர் தனுஷ், கமல் படங்களுடன் போட்டி போட்டு வருவதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஜெனி-செழியனை சேர்த்து வைக்கும் பாக்கியா.., வழக்கம் போல் பல்பு வாங்கிய கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here