மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டம்..!

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மொழிகளில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது.

மாஸ்டர்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படம் ஏப்ரல் 9 தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இந்தியா படமாக ரிலீஸ்..!

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக ஐனாக்ஸ் திரையரங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தல ஸ்டைலில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட நாயகி – வைரலாகும் வீடியோ

ஆனால், பான் இந்தியா படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பை மாஸ்டர் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தியா பட ரீமேக்கில் நடிக்க சமந்தா விருப்பம்..!

ஊரடங்கு முடிந்த பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த முறை தளபதி விஜய்யின் படத்தை ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவிக்க திட்டமிட்டுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here