பிரபல தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

0

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பின் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு மே மாதம் 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா  முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதற்கிடையே வீட்டிற்குள் இருக்கும் மக்களின் பொழுதைபோக்க முடிவெடுத்து களமிறங்கிய தூர்தர்ஷன் பிரபல தொடர்களை மீண்டும் ஒளிபரப்பு செய்யபோவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் எழுந்த தூர்தர்ஷன்

இந்தியாவில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 640 பேர் உயிரிழந்துள்ளனர், 3870 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது சிகிச்சை பெற்று வரும் 15,474 பேரில் 77 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கொரோனா தாக்கத்தால் மக்கள் பீதியில் வெளிய வீட்டினுள்ளே இருக்கிறார்கள்,அவர்களின் பொழுதினை போக்க சில நாட்களுக்கு முன் தூர்தர்ஷன் சேனல் விஸ்வரூபம் எடுத்தது, பிரபல தொடரான ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஊரடங்கில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சேனல் என்ற சாதனையை செய்தது தூர்தர்ஷன்.

மீண்டும் ஒளிபரப்பாகும் காவியங்கள்

தூர்தர்ஷன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதனால் சிறப்பான தொடர்கள் மற்றும் வரலாறு காவியங்கள போன்ற நல்ல தொடர்கள் நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், வரலாறு இன்னும் அதிகம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள நல்ல தொடர்களுக்கு எப்போதும் மக்களிடம் ஆதரவு இருப்பது இதனால் தெரியவந்துள்ளது. ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என்பதனால் அந்த பிரபல நிகழ்ச்சி மற்றும் தொடர்களை மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here