
லெஜெண்ட் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் புதிதாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தி லெஜண்ட் திரைப்படம்
உலகம் முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஜவுளி சாம்ரஜ்ஜியத்தை நடத்தி வருபவர் தான் லெஜண்ட் அண்ணாச்சி. இவர் கடையின் விளம்பரத்தில் நடிக்க தொடங்கி, தி லெஜண்ட் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் லெஜண்ட் அண்ணாச்சி. இப்படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சர்க்கரை நோயால் மக்கள் அவதிப்படும் நிலையில் அவர்களின் குறையை தீர்த்து வைக்க சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது தான் படத்தின் கதைச்சுருக்கம். புதுமுக நடிகை ஊர்வசி ரவ்தெலா அண்ணாச்சிக்கு ஹீரோயினாக நடித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அதுபோக விவேக், ரோபோ சங்கர்,நாசர், கோவை சரளா பிரபு மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
முதலிரவை அப்பட்டமாக காட்டிய தனுஷ் பட நடிகை.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!
இப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் புதிதாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Legend storms Hotstar as No.1⚡️ 💥💫✨
A New Era has started!
▶️ https://t.co/i14CM9CUHQ #Legend streaming in @DisneyPlusHS #Tamil #Telugu #Malayalam #Hindi @yoursthelegend #Legend #TheLegend #LegendSaravanan @DirJdjerry @Jharrisjayaraj @thinkmusicindia @onlynikil #NM pic.twitter.com/SknO6JiGFw
— Legend Saravanan (@yoursthelegend) March 4, 2023