The Legend பட ரிலீசுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – அண்ணாச்சிக்கு அடிச்ச சூப்பர் லக்கு!

0

தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இது குறித்த சுவாரசிய தகவல் வெளியாக உள்ளது.

தி லெஜண்ட் சரவணன்:

தமிழகத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக விளங்குபவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. அவர் கடையின் விம்பரங்களில் நடித்து பல நெட்டிசன்களுக்கு கன்டென்ட் ஆக திகழ்ந்தவர். தற்போது புதிய அவதாரமாக வெள்ளி திரையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்துள்ளார். அண்மையில் பிரமாண்டமாக தி லெஜண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகிற ஜூலை 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 188 வெளி நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண போட்டோ வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு நடுரோட்டில் நடந்த கேவலம் – வைரலாகும் வீடியோ!!

இதை எல்லாரும் கண்டுகளிக்க வேண்டும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த முடிவு தி லெஜண்ட் சரவணன்க்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய் உள்ளூர் விடுமுறை அன்று படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அண்ணாச்சிக்கு செம லக் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here