மொபைல் எண் 11 இலக்கமாகிறதா ?? அழைப்பு முறையை மாற்ற டிராய் பரிந்துரை..!

0

நாடுமுழுவதும் செல்போன் எண்கள் 10 இலக்கத்தில் இருக்கும் தற்போது அதனை 11 இலக்கமாக மாற்ற டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை டிராய் நிறுவனம் மறுத்துள்ளது.

‘சிம் கார்டு’

தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் செல்போன் எண்கள் 10 இலக்கங்கள் தான் இருக்கும்.

ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் ...

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்கங்களில் தான் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.

Can mobile phones cause cancer? This new study says yes, raises ...

மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.

டிராய் நிறுவனம்

இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், ‘லேண்ட் லைன்’ தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம்.

இனி குறைந்த விலையில் அதிக சேனல்களை ...

இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here