சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் – மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நலிவடைந்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மற்றும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார்.

அமைச்சர் அறிவிப்புகள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி, விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். அதில்,

  • சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி
  • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு.
  • இதனால் விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும்.
  • ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
  • மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
  • குறு நிறுவனங்களின் நிதி வரையறை ரூ.25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  • 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் என தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here