பிரபல மலையாள பட ரீமேக்கில் கார்த்தி & சூர்யா..!

0

லையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல சுவாரசியமான கதைகளை கொண்ட மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.அப்படி கடந்த பெப்ரவரி மாதம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.இதை தமிழில் பிரபல நடிகரான சிவகுமாரின் மகன்கள் ஆன சூர்யா கார்த்தி நடிக்க வைத்து ரீமேக் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அய்யப்பனும் கோஷியும் மலையாள படம்

பிப்ரவரி 2020 மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதில் பிரித்விராஜ்,பிஜுமேனன் நடித்தனர் இப்படத்தின் மற்ற மொழியில் ரீமேக் செய்ய  உரிமைகளை கொரோனா ஊரடங்கு காலத்திலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என தயாரிப்பாளர்கள் கைப்பற்றி விட்டார்கள்.  இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். கடைசியில் ‘ஜிகர்தண்டா’, ‘ஆடுகளம்’ படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

சூர்யா கார்த்தி இணைய போகிறார்களா

இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க போவதாக பல தகவல்கள் வதந்திகள் என வெளிவந்தது முதலில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.அதன் பின் சசிகுமார் – ஆர்யா என அந்த காம்பினேஷன் மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க போவதில்லை என பேட்டி ஒன்றினை அளித்தார் என ஒரு செய்தி வெளியானது.சசிகுமார் மட்டுமே நடிப்பது  என உறுதியாகியுள்ளது.பின் விஜய் சேதுபதி சசிகும்மர் என ஒரு தகவலும் வெளியாகின அதுவும் கடைசியில் வதந்தியாவே போனது.

இப்பொழுது பிரபல நடிகரான சிவகுமாரின் மகன்கள்களான  சூர்யாவும் கார்த்தியுமே முதன்முறையாக இந்தப்படத்தில் இணைந்து அண்ணன் தம்பியானவர்கள் அய்யப்பனும் கோஷியுமாக மாறப்போகிறார்கள் என்கிற புது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த தகவகல்களுக்கெல்லாம் ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன் சீக்கிரமே முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கலாம்.இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால கனவாக இருந்தது, அது விரைவில் நடப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரிகிறது.சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், விரைவில் ஹரி இயக்கும் ‘அருவா’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அதேபோல், கார்த்தி ‘சுல்தான்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here