தியேட்டரில் பிரபல நடிகரின் படத்தை பார்த்து கொண்டாடிய விஜய்.., நிஜமான Fan Boy ஆக மாறிட்டாரே – போட்டோ வைரல்!!

0
தியேட்டரில் பிரபல நடிகரின் படத்தை பார்த்து கொண்டாடிய விஜய்.., நிஜமான Fan Boy ஆக மாறிட்டாரே - போட்டோ வைரல்!!
தியேட்டரில் பிரபல நடிகரின் படத்தை பார்த்து கொண்டாடிய விஜய்.., நிஜமான Fan Boy ஆக மாறிட்டாரே - போட்டோ வைரல்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க விஜய் கமிட்டாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தளபதி 68 பட லுக்கிற்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். அதன்படி நேற்று அந்த தொழில்நுட்பத்தில் நடிகர் விஜய் அமர்ந்திருக்கும் போட்டோவை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை தூண்டினார். தற்போது தியேட்டரில் தளபதி விஜய் படம் பார்த்து தனது பிடித்த நடிகரை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டியுள்ளது.

வசூலில் மாஸ் காட்டிய “ஜெயிலர்” திரைப்படம்.., தயாரிப்பாளருக்கு டபுள் மடங்கு லாபம் கொடுத்து அசத்தல்!!

அதாவது விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் Denzel Washington நடிப்பில் உருவாகியுள்ள The Equalizer 3 படம் நேற்று வெளியான நிலையில் மூவரும் முதல் ஷோவை பார்த்து கண்டு மகிழ்ந்துள்ளனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here