சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 20ம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை செய்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர். தர்பார், அண்ணாத்த பட பிளாப்க்கு பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி வாகை சூட ஆரம்பித்துள்ளார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் படத்தோட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுக்கு சொகுசு கார்களை பரிசாக அளித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மீண்டும் ரஜினியுடனும், நெல்சனுடனும் ஒரு படம் பண்ண இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 23 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் 602 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி தயாரிப்பாளருக்கு 250 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.