2000 ரூபாய் நோட்டுகள்…, இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா?? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
2000 ரூபாய் நோட்டுகள்..., இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா?? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
2000 ரூபாய் நோட்டுகள்..., இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா?? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), கடந்த மே 19 ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற உள்ளதாக திடீரென அறிவித்து இருந்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை இனி வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வரும் தங்கள் கையில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை மாற்றி அமைக்க வங்கிகளில் அலை மோதினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன்படி, நேற்று (செப்டம்பர் 1) வரை ரூ. 3.32 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் (கிட்டத்தட்ட 93%) மக்களிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளதாகவும், இன்னும் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் தான் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இம்மாதம் 30ம் (செப்டம்பர்) தேதிக்குள் கையில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூவி கூவி விற்கும் வியாபாரிகள்.., கடும் சரிவை கண்ட தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here