தளபதி 66காக நச்சரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – முரண்டு பிடிக்கும் விஜய்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இளைய தளபதி தற்போது தொடர்ந்து தனது வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது தளபதி 66 படத்திற்கான சுவாரசியமான தகவல் வெளி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தளபதி 66

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகராக திகழ்பவர் இளையதளபதி விஜய். தற்போது அவர் நடிக்கும் படங்கள் அனைத்து மாஸ் ஹிட் அடித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் 2019 ஆம் ஆண்டில் இருந்து வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார். இதனாலேயே தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். தொடர்ந்து சிறிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்.

மெர்சல் படத்தில் ஆரம்பித்து தற்போது வரை அவருக்கு நல்ல வசூல் வேட்டை தான். தற்போது மாஸ்டர் திரைப்படமும் 1 மாதத்திற்கும் மேலாக வெற்றிநடை போட்டது. தற்போது விஜய் தனது 65வது திரைப்படத்தில் நெல்சனுடன் இணைந்துள்ளார். இதனை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த தளபதி 65 பற்றிய அப்டேட்டை விட தளபதி 66 பற்றிய அப்டேட் தான் அதிகளவில் பரவி வருகிறது.

அதாவது விஜய் நடித்த பிகில் திரைப்படம் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்தது. 150 கோடியில் முடிக்க வேண்டிய படத்தை அட்லீயின் கவனக்குறைவால் 180 கோடி வரை பட்ஜெட் ஆனது. ஆனாலும் 300 கோடி வசூலை பெற்றது. அதனால் சிறிய முதலீட்டில் லாபத்தை பெற்று விட வேண்டும் என்று விஜயை நச்சரித்து வருகின்றனராம். மேலும் பல தயாரிப்பாளர்கள் விஜய்க்கு தூண்டில் போட்டு வருகிறது. இதனால் விஜய் குழப்பத்தில் உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here