தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., கல்வித்துறை அதிரடி!!!

0
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., கல்வித்துறை அதிரடி!!!
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., கல்வித்துறை அதிரடி!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் என அரசு அண்மையில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 7 ஆம் தேதி முதல் திறக்க உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அன்றைய தினமே மாணவர்களுக்கு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் காரணமாக 1 முதல் 7ஆம் வகுப்பு வரை முதல் பருவ பாடப் புத்தகங்கள், 8 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடப்புத்தகங்களும் என 4.12 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 3 கோடி இலவச பாடப்புத்தகங்கள், உரிய நேரத்தில் சென்றடைகிறதா? என்பதை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயசு 35 ஆகிருச்சு.. ரெண்டு குழந்தைக்கு அம்மாவும் ஆயிட்டே.., இப்ப ஹீரோயினா? மேடையில் ராஜலக்ஷ்மி நெகிழ்ச்சி!!

எஞ்சியுள்ள 1.12 கோடி புத்தகங்களை கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றனர். கல்வித்துறையின் டிபிஐ வளாகம் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய பகுதிகளில் தனியார் பள்ளி உள்ளிட்ட பலருக்கும் வாங்கி செல்கின்றனர். இதுபோக 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள 10 லட்சத்திற்கு மேலான தமிழ் பாடப்புத்தகங்களை CBSE பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here