சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் – ஆல்ரவுண்டர் புள்ளிப்பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்!!

0

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டார். தற்போது இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான ஆல் ரவுண்டர் புள்ளிப்பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அஸ்வின்

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்து அசதியுள்ளனர். குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தும் அசத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர் தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அஸ்வின் இந்த போட்டியில் தனது பங்களிப்பை அளித்தார். தற்போது இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஸ்வினின் சிறப்பான ஆட்டத்தால் இவர் ஆல்ரவுண்டர் புள்ளிப்பட்டியலில் முன்னேறி உள்ளார்.

ராஜஸ்தானில் சதம் அடித்த பெட்ரோல் விலை – வருத்தத்தில் வாகன ஓட்டிகள்!!

இதுவரை 6வது இடத்தில் இருந்த அஸ்வின் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் மேற்கிந்திய தீவு அணியின் ஹோல்டர் 407 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜடேஜா 403 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here