தமிழகத்தில் விரைவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
minister senkotayan
minister senkotayan

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்து பின்னர் தகவல்கள் வெளியிடப்படும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பொது தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஜனவரி 19ல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்ளுக்கும், கடந்த பிப்ரவரி 8 முதல் ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்ளுக்கும் பள்ளிகள் துவங்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் பதினோராம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது.

2009 மக்களவை தேர்தல் – பா.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்!!

தற்போது 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய செங்கோட்டையன், “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விரைவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்குகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் “முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது பற்றி தற்போது எதுவும் கூற இயலாது எனவும், உருது மொழியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை, எனவே வெளி மாநிலங்களிருந்து உருது மொழி கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், TRB தேர்வினை மீண்டும் எழுதுவதற்கான வயது வரம்பினை 45க்கு மேல் உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here